உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி: சந்திரபாபு நாயுடு
உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி: சந்திரபாபு நாயுடு
உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி: சந்திரபாபு நாயுடு
UPDATED : ஜூன் 07, 2024 06:04 PM
ADDED : ஜூன் 07, 2024 12:52 PM

புதுடில்லி: ‛‛ உலகின் சக்தி வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் ' என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
டில்லியில் பழைய பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த தேஜ கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேசுகையில்,
உலகளவில் சிறந்த தலைவர் பிரதமர் மோடி. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் மகத்தான வளர்ச்சி அடைந்துள்ளோம். மோடி கூறியது போல், உலகளவில் 2047 ல் இந்தியா வளர்ந்த மற்றும் வல்லரசு நாடாக மாறும். உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி. சரியான நேரத்தில் சரியான தலைவரை இந்தியா மீண்டும் தேர்வு செய்துள்ளது. மோடியின் பிரசாரம் ஆந்திராவில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் பேசியதாவது: நாம் ஒன்றாக இணைந்திருப்பது நல்ல விஷயம். நாங்கள் எல்லோரும் உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவோம். ஞாயிற்றுக் கிழமை நீங்கள் பிரதமராக பதவியேற்க உள்ளீர்கள். இன்றே நீங்கள் பதவியேற்றிருக்கலாம் என நான் விரும்புகிறேன். நீங்கள் எப்போது உறுதிமொழி ஏற்றாலும் நாங்கள் உங்களுடன் இருப்போம். நாங்கள் உங்கள் தலைமையில் இணைந்து பணியாற்றுவோம்.இந்தியர்களின் அனைத்து விருப்பங்களையும் பிரதமர் மோடி நிறைவேற்றுவார்.
‛ இண்டியா ' கூட்டணி கட்சியினர் நாட்டிற்கும், எங்கள் மாநிலத்திற்கும் ஒன்றும் செய்யவில்லை. இம்முறை எதிர்க்கட்சி வரிசையில் அமரும் ‛இண்டியா' கூட்டணி கட்சியினர் அடுத்த முறை அடுத்த முறை அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும்.
பிரதமராக மோடியை தேர்வு செய்வதில் ஐக்கிய ஜனத தளம் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது. மோடியின் தலைமையில் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். தேஜ கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். மோடி மீண்டும் பிரதமர் ஆவதை ஐஜத ஆதரிக்கிறது. இந்த நாட்டிற்காக அவர் சேவை செய்துள்ளார். அந்த சேவையில் ஏதேனும் மிச்சமிருந்தால் அதனை இந்த முறை பூர்த்தி செய்வார். இவ்வாறு அவர் பேசினார்.