தே.ஜ., கூட்டணியின் பார்லி., குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு
தே.ஜ., கூட்டணியின் பார்லி., குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு
தே.ஜ., கூட்டணியின் பார்லி., குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு
UPDATED : ஜூன் 07, 2024 01:13 PM
ADDED : ஜூன் 07, 2024 11:57 AM

புதுடில்லி: டில்லியில் பழைய பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்களின் ஆலோசனை கூட்டத்தில் அக்கூட்டணியின் பார்லிமென்ட் குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார்.
லோக்சபா தேர்தலில் 294 இடங்களை பிடித்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இக்கூட்டணிக்கு சில சுயேச்சைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பழைய பார்லிமென்ட் வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.,க்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார், பாஜ., தலைவர் நட்டா, லோக்ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித்பவார், பட்னாவிஸ், பா.ஜ., மாநில முதல்வர்கள், மாநில பாஜ., முதல்வர்கள், ம.பி., முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தேர்வு
இந்த கூட்டத்தில் தேஜ., கூட்டணியின் பார்லிமென்ட் குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.


