ரூ.4.50 கோடி கஞ்சா கடத்தல் மாடல் அழகியுடன் பெண் கைது
ரூ.4.50 கோடி கஞ்சா கடத்தல் மாடல் அழகியுடன் பெண் கைது
ரூ.4.50 கோடி கஞ்சா கடத்தல் மாடல் அழகியுடன் பெண் கைது
ADDED : மார் 21, 2025 01:59 AM
திருவனந்தபுரம்,:விமானத்தில், 4.50 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்திய, மாடல் அழகி உட்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கேரள மாநிலம், கொச்சின் வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில், கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாடல் அழகி மான்வி சவுத்ரி, டில்லி ஒப்பனை கலைஞர் சிபத் ஸ்வாந்தி ஆகியோர் 15 கிலோ கஞ்சாவை கடத்தியது தெரிய வந்தது.
சோதனையில் கண்டுபிடிக்க முடியாத வகையில் மேக்கப் பொருட்கள் இருந்த பெட்டியில், இது மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். அதன் மதிப்பு, 4.50 கோடி ரூபாய் என, சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொச்சினில் ஒரு கும்பலுக்கு கொடுக்க கஞ்சாவை அவர்கள் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த கும்பலையும் கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.