பள்ளத்தில் தவறி விழுந்து காட்டு யானை பலி
பள்ளத்தில் தவறி விழுந்து காட்டு யானை பலி
பள்ளத்தில் தவறி விழுந்து காட்டு யானை பலி
ADDED : மார் 21, 2025 02:00 AM

மூணாறு:மூணாறு அருகே பெரியகானல் எஸ்டேட், நியூ டிவிஷன் பகுதியில் பெண் காட்டு யானை இறந்த நிலையில் கிடந்தது.
அப்பகுதிக்கு நேற்று காலை பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் காட்டு யானை இறந்து கிடந்ததை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தேவிகுளம் வனத்துறை அதிகாரி அகில் கே. பாபு, போடிமெட்டு பிரிவு வனத்துறை அதிகாரி சுஜித் சம்பவ இடத்தில் ஆய்வு நடந்தினர்.
அவர்கள் கூறியதாவது: அப்பகுதியில் கூட்டத்துடன் சுற்றித்திரிந்த எட்டு வயதுடைய பெண் காட்டு யானை 20 அடி உயரத்தில் இருந்து கால் தவறி பள்ளத்தில் விழுந்ததால் இறந்திருக்க வாய்ப்புள்ளது. சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. தேக்கடியைச் சேர்ந்த வனத்துறை கால்நடை டாக்டர்கள் யானையின் உடலை பிரேத பரிசோதனை நடத்திய பிறகு இறந்த காரணம் குறித்து தெரியவரும் என்றனர்.