வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
ADDED : மார் 21, 2025 01:02 AM
புதுடில்லி,:திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பாரத் ஹிந்து முன்னணி அமைப்பின், வடசென்னை மாவட்ட துணைத் தலைவரான யுவராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
ஹிந்து கடவுளான முருகனின் கோவில் அமைந்துள்ள மதுரை திருப்பரங்குன்றம் மலையை, இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். எனவே, அந்த மலையை காக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி தர வேண்டும்.
சென்னையில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோவில் வரை, இந்த யாத்திரையை நடத்த திட்டமிட்டு உள்ளோம். எனவே, அதற்கு உரிய பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, பாரத் ஹிந்து முன்னணி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.