இந்தியாவுடன் பேச்சு நடத்த விருப்பம்: பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
இந்தியாவுடன் பேச்சு நடத்த விருப்பம்: பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
இந்தியாவுடன் பேச்சு நடத்த விருப்பம்: பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
ADDED : மே 11, 2025 12:28 AM

புதுடில்லி: போர்நிறுத்த அறிவிப்பை ஏற்று இந்தியா நேற்று(மே 10)தாக்குதலை நிறுத்தியிறுந்த நிலையில் பாக்., ராணுவம் அத்துமீறி மீண்டும் தாக்குதலை தொடர்ந்து எலையோர மாநிலங்களில் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று(மே 11) பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் இந்தியாவுடன் பேச்சு நடத்த விரும்புவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தலின்படி முதலில் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பாக்., மீண்டும் அதனை மீறி நேற்று மாலையில் மீண்டும் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் தாக்குதலை தொடங்கியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துவருகிறது. தற்போது பாக்., பிரதமர் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.போர்நிறுத்த வாக்குறுதியை மீறிய பாக்., செயல்பாடு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.