எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்காதது ஏன்? பியூஷ் கோயல் விளக்கம்
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்காதது ஏன்? பியூஷ் கோயல் விளக்கம்
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்காதது ஏன்? பியூஷ் கோயல் விளக்கம்

கட்சி சாராதவர்
இது தொடர்பாக பியூஷ் கோயல் கூறியதாவது: முதலில் துணை சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை தேர்வு செய்த பிறகு, சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு தருவதாக எதிர்க்கட்சிகள் கூறின. இதற்கு நாங்கள் கண்டனம் தெரிவித்தோம். சபாநாயகரை, ஒருமனதாக தேர்வு செய்வது சிறப்பான பாரம்பரியம். அவர், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என எந்த கட்சியையும் சாராதவர். அவர் ஒட்டு மொத்த அவைக்குமானவர்.
எதிரானது
அதேபோல், துணை சபாநாயகரும் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. அவரும் ஒட்டுமொத்த அவைக்குமானவர். ஒருமித்த கருத்து அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர் அல்லது குறிப்பிட்ட நபர் தான் துணை சபாநாயகர் ஆக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது லோக்சபா பாரம்பரியத்திற்கு எதிரானது. இண்டியா கூட்டணியின் நிபந்தனைகள் லோக்சபா மரபுக்கு எதிரானது என்பதால், ஏற்கவில்லை.
கண்டனம்
ராஜ்நாத் சிங், இன்று கார்கே உடன் ஆலோசனை நடத்த விரும்பினார். ஆனால், அவர் வேறு பணி காரணமாக வேணுகோபால் பேசுவார் என்றார். வேணுகோபால் மற்றும் பாலு ஆகியோருடன் பேசினோம். அப்போது அவர்கள் பழைய மன நிலையிலேயே, நிபந்தனைகளை நாங்கள் விதிப்போம். துணை சபாநாயகர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்வோம் . பிறகு தான் ஆதரவு தருவோம் என்றனர். இந்த வகை அரசியலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவித்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.