அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்
அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்
அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்
ADDED : ஜூலை 10, 2024 04:53 PM

மும்பை: பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், அதிகாரத்தை பயன்படுத்தி தனது சொந்த காரில் சிவப்பு விளக்கு பொருத்தியதுடன், மஹாராஷ்டிரா அரசு என்ற வாசகம் கொண்ட பெயர் பலகையை மாட்டி உள்ளார். இதனையடுத்து அவரை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
யுபிஎஸ்சி தேர்வில், அகில இந்திய அளவில் 821வது இடத்தை பிடித்து ஐஏஎஸ் அதிகாரியானவர் பூஜா கடேகர். 2023ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர். இவர் புனேயில் பயிற்சிக்காக உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டு இருந்தார்.
இவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பயிற்சியில் இருக்கும் போது, தனது சொந்த காரில் சிவப்பு விளக்கு பொருத்தியதுடன், மஹாராஷ்டிரா அரசு என்ற வாசகம் கொண்ட போர்டையும் மாட்டினார். அலுவலகத்தில், உதவி கலெக்டர் வெளியில் செல்லும் போது அவரது அறையை எடுத்து கொள்வதுடன், அவரது அனுமதியின்றி அங்கிருந்த பொருட்களையும் அகற்றி உள்ளார்.
தனது பெயரில் பெயர் பலகை, லெட்டர்பேட் உள்ளிட்டவற்றை தயாரித்து வரும்படி , அலுவலர்களுக்கு உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அவரது தந்தை ஓய்வு பெற்ற அரசு அதிகாரி என்பதால், மகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும்படி அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, மாவட்ட கலெக்டர் சுஹாஸ் திவாசே, தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதினார். பூஜா கடேகர், வாஷிம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.