பா.ஜ.,வுக்கு தாவிய ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,: சொல்லும் காரணம் என்ன?
பா.ஜ.,வுக்கு தாவிய ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,: சொல்லும் காரணம் என்ன?
பா.ஜ.,வுக்கு தாவிய ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,: சொல்லும் காரணம் என்ன?
ADDED : ஜூலை 10, 2024 04:41 PM

புதுடில்லி: ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., கர்தார் சிங் தன்வார் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். 'ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்கத்தில் இருந்து உருவான கட்சி ஊழலில் ஆழ்ந்துள்ளது' என கர்தார் சிங் தன்வார் குற்றம் சாட்டியுள்ளார்.
டில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கர்தார் சிங் தன்வர், முன்னாள் டில்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் மற்றும் அவரது மனைவி ஆகியோர் டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று(ஜூலை 10) பா.ஜ.,வில் இணைந்தனர்.
விலகியதற்கு காரணம் என்ன?
இது தொடர்பாக, ஆம்ஆத்மி எம்.எல்.ஏ கர்தார் சிங் தன்வர் கூறியதாவது: டில்லி மோசமான நிலையில் உள்ளது. வளர்ச்சிப் பணிகள் இல்லாததால், தண்ணீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்கத்தில் இருந்து உருவான கட்சி ஊழலில் ஆழ்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறார் என இரண்டு ஆம் ஆத்மி கட்சி தலைவர்களும் பாராட்டி உள்ளனர்.