"மகனால் வந்த வினை": ஷிண்டே சிவசேனா தலைவர் ராஜேஷ் ஷா பதவி பறிப்பு
"மகனால் வந்த வினை": ஷிண்டே சிவசேனா தலைவர் ராஜேஷ் ஷா பதவி பறிப்பு
"மகனால் வந்த வினை": ஷிண்டே சிவசேனா தலைவர் ராஜேஷ் ஷா பதவி பறிப்பு
ADDED : ஜூலை 10, 2024 03:48 PM

மும்பை: மும்பையில் பி.எம்.டபிள்யு., கார் மோதி பெண் உயிரிழந்த விவகாரத்தில், தேடப்பட்டு வந்த சிவசேனா தலைவர் மகன் மிஹிர் ஷாவை போலீசார் கைது செய்தனர். சிவசேனா கட்சியின் துணை தலைவர் பதவியில் இருந்து ஷாவின் தந்தை ராஜேஷ் ஷாவை நீக்கும்படி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.
மஹாராஷ்டிராவில் சிவசேனாவைச் சேர்ந்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மும்பையைச் சேர்ந்த பிரதீப் நகாவா, காவேரி தம்பதி இருசக்கர வாகனத்தில் கோலிவாடா என்ற பகுதியில் சென்ற போது, எதிரே வேகமாக வந்த பி.எம்.டபிள்யு., மோதியது. பிரதீப், இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பினார். காவேரி மீது கார் ஏறி இறங்கியதால், உயிரிழந்தார்.
காரை குடிபோதையில் ஓட்டி சென்றது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் துணை தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் ஷா என்பவரின் மகன் மிஹிர் ஷா (வயது 24) என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. சிவசேனா தலைவர் மகன் மிஹிர் ஷாவை போலீசார் கைது செய்தனர். இந்த சூழலில், சிவசேனா கட்சியின் துணை தலைவர் பதவியில் இருந்து ஷாவின் தந்தை ராஜேஷ் ஷாவை நீக்கும்படி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.