பட்டாசு ஆலையில் வெடி விபத்து மூன்று தொழிலாளர்கள் பலி
பட்டாசு ஆலையில் வெடி விபத்து மூன்று தொழிலாளர்கள் பலி
பட்டாசு ஆலையில் வெடி விபத்து மூன்று தொழிலாளர்கள் பலி
ADDED : ஜன 29, 2024 07:35 AM
மங்களூரு: பட்டாசு தொழிற்சாலையில், தீ விபத்து ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்தனர்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின், பெல்தங்கடியின், வேனுாரு கிராமத்தில், கோளியங்கடி என்ற இடத்தில் 'சாலிட் பயர் ஒர்க்' என்ற பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இது பஷீர் என்பவருக்கு சொந்தமானது. இதில் ஒன்பது தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளாக செயல்படும் தொழிற்சாலையில் பட்டாசு தயாரித்து, திருவிழா உட்பட, மற்ற நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.
கிட்டங்கியில் நேற்று மாலை, தொழிற்சாலையில் பணிகள் நடந்தபோது பட்டாசுகள் வெடித்து தீப்பிடித்தது. வெடி சத்தம் 4 கி.மீ., தொலைவுக்கு கேட்டது. விபத்தில் கேரளாவின் சாமி, 55, வர்கீஸ், 68, ஹாசன், அரசிகெரேவின் சேத்தன், 25, உடல் சிதறி உயிரிழந்தனர்.
தினேஷ், கிரண், குமார், கல்லேஷ், பிரேம், கேசவா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து வேனுாரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.