Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 4 வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 4 வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 4 வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 4 வீரர்கள் வீரமரணம்

UPDATED : ஜூலை 08, 2024 08:17 PMADDED : ஜூலை 08, 2024 08:09 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு - காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் உள்ள மச்சேடி பகுதியில், இன்று (ஜூலை 08) ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உடன் உஷாரான பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 6 வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாகவும், பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக 6-ம் தேதி குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது ஆறு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us