சல்மான்கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சல்மான்கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சல்மான்கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
UPDATED : ஜூலை 08, 2024 10:13 PM
ADDED : ஜூலை 08, 2024 07:26 PM

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்று மும்பை பேலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீடு மும்பை பந்த்ராவில் உள்ளது. இவரது வீட்டின் அருகே ஏப். 14-ல் அதிகாலை 5 மணியளவில் பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடினர். இதில் யாருக்கும் காயமில்லை.
இந்தசம்பவ குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி விக்கி குப்தா,24, சாகர்பால் 21 ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வந்த நிலையில் மேலும் சோனு சுபாஷ் சந்தர் , மற்றும் அனுஜ்தபான் 32 என்ற முக்கிய குற்றவாளிகள் கடந்த ஏப். 26-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் அனுஜ் தபான், போலீஸ் காவலில் இருந்த நிலையில் தற்கொலை முயற்சியில் உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கு எம்.சி.ஓ.சி.ஏ. எனப்படும் மஹாராஷ்டிரா குற்ற அமைப்பு தடுப்பு கோர்ட்டில் மும்பை குற்றப்பிிரிவு போலீசார் 9 பேரை குற்றவாளிகளாக சேர்த்து 1,735 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.