ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு: ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் சிக்கல்
ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு: ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் சிக்கல்
ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு: ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் சிக்கல்
UPDATED : ஜூலை 08, 2024 09:00 PM
ADDED : ஜூலை 08, 2024 08:52 PM

புதுடில்லி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை இன்று உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
நில மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும், அம்மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை கடந்த ஜன.,31 ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு ஜூன் 28 ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.
இந்நிலையில் ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமின் சட்டத்துக்கு புறம்பானது எனவும், ஜாமினை ரத்து செய்ய கோரியும் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அப்பீல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டு்ள்ளது.