Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தொடர் வயிற்று வலி இளம்பெண் மரணம்

தொடர் வயிற்று வலி இளம்பெண் மரணம்

தொடர் வயிற்று வலி இளம்பெண் மரணம்

தொடர் வயிற்று வலி இளம்பெண் மரணம்

ADDED : ஜன 01, 2024 06:31 AM


Google News
சிக்கமகளூரு: குழந்தை பெற்ற பின், வயிற்று வலியால் இளம் பெண் உயிரிழந்தார். இதற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என, பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

சிக்கமகளூரு, சகராயபட்டணா அருகில் உள்ள வடேரஹள்ளி கிராமத்தில் வசித்தவர் ரஞ்சிதா, 21. ஓராண்டுக்கு முன்புதான் அவருக்கு திருமணம் ஆனது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, இரண்டு நாட்களுக்கு முன் பிரசவ வலி ஏற்பட்டது.

சிக்கமகளூரு நகரின், மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவித்த பின், அவருக்கு வயிற்று வலி அதிகரித்து நேற்று காலை உயிரிழந்தார். இவரது இறப்புக்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம். சரியாக சிகிச்சையளிக்கவில்லை என, பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us