Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஆமதாபாத்தில் நடந்த விபத்துக்கு முன் விமானி கூறியது என்ன?

ஆமதாபாத்தில் நடந்த விபத்துக்கு முன் விமானி கூறியது என்ன?

ஆமதாபாத்தில் நடந்த விபத்துக்கு முன் விமானி கூறியது என்ன?

ஆமதாபாத்தில் நடந்த விபத்துக்கு முன் விமானி கூறியது என்ன?

ADDED : ஜூன் 14, 2025 12:44 PM


Google News
Latest Tamil News
ஆமதாபாத்: ஆமதாபாத்தில் விபத்துக்கு முன், விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு அவசர உதவி கோரி விமானி தகவல் அனுப்பி உள்ளார்.

ஆமதாபாத்தில் 242 பயணிகளுடன் 'ஏர் - இந்தியா' விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தை அறியும் பணிகள் நடந்து வருகின்றன. விபத்துக்கு சில வினாடிகளுக்கு முன், விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு அவசர கால உதவு கோரி விமானி தகவல் அனுப்பி உள்ளார்.

விபத்துக்கு முன், விமானி கூறிய ஆடியோ மெசேஜ் வெளியாகி உள்ளது. ''MAY DAY...MAY DAY...MAY DAY...NO POWER...NO THRUST...GOING DOWN...என விபத்துக்கு முன்னர் விமானி கூறியுள்ளார்.

'மே டே' என்பது விமானப்போக்குவரத்து மற்றும் கடல் வழி பயணத்தின்போது,ஆபத்தில் இருப்பதை வெளிப்படுத்தும் சங்கேத வார்த்தையாகும். இவ்வாறு மூன்று முறை 'மே டே' என அடுத்தடுத்து குறிப்பிட்டு, என்ன பிரச்னை என்பதையும் விமானி குறிப்பிட்டுள்ளார்.

'நோ பவர்' 'நோ திரஸ்ட்' 'கோயிங் டவுண்' என்பதை தெளிவாக அவர் குறிப்பிட்டுள்ளதை பார்க்கும்போது, விமானம் கீழே விழப்போவதை உணர்ந்து விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த தகவல் கிடைத்தவுடன், கட்டுப்பாட்டு அறையில் இருந்த அலுவலர்கள், விமானியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். அதற்குள் விமானம் கீழே விழுந்து வெடித்து விட்டது.

பணிப்பெண் உடல் மீட்பு

இதற்கிடையே விபத்து நடந்து 2 நாட்கள் ஆன நிலையில், விமான பணிப்பெண் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அமைச்சர் ஆலோசனை

இந்த சூழலில் விமான பாதுகாப்பு தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சிவில் விமான போக்குவரத்து செயலாளர், விமான நிலைய ஆணைய அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us