ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு
ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு
ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு
ADDED : ஜூன் 05, 2024 11:23 PM

புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின், தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார்.
இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினும், தே.ஜ., கூட்டணியில் பங்கேற்க சந்திரபாபு நாயுடுவும் டில்லி சென்றுள்ளனர்..
இந்நிலையில் டில்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது லோக்சபா , சட்டசபை தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றிப் பெற்றதற்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
மத்திய அரசில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் , தமிழகம், ஆந்திரா இடையே தென்மாநிலங்களுக்கான உரிமைகளை பாதுகாப்பார் என நம்புகிறேன்” என ‛‛ எக்ஸ்'' தளத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.