துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான்கானிடம் போலீசார் வாக்குமூலம்
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான்கானிடம் போலீசார் வாக்குமூலம்
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான்கானிடம் போலீசார் வாக்குமூலம்
ADDED : ஜூன் 12, 2024 10:09 PM

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று பதிவு செய்தனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் மும்பை பந்த்ராவில் கேலக்ஸி குடியிப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே கடந்த ஏப். 14-ல் அதிகாலை 5 மணியளவில் பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடினர். இதில் யாருக்கும் காயமில்லை.
இந்தசம்பவ குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி விக்கி குப்தா,24, சாகர்பால் 21 ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கில் இன்று மும்பை குற்றப்பிரிவு போலீசார் நடிகர் சல்மான்கானிடம் வாக்குமூலம் பெற்று பதிவு செய்தனர். கடந்த 4-ம் தேதி அவரது சகோதரரிடம் அர்பாஸ் கானிடமும் வாக்குமூலம் பெற்றனர்.