போக்சோ வழக்கில் எடியூரப்பாவிற்கு மீண்டும் போலீஸ் சம்மன்
போக்சோ வழக்கில் எடியூரப்பாவிற்கு மீண்டும் போலீஸ் சம்மன்
போக்சோ வழக்கில் எடியூரப்பாவிற்கு மீண்டும் போலீஸ் சம்மன்
ADDED : ஜூன் 12, 2024 08:53 PM

பெங்களூரு: பாலியல் புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு போலீசார் இன்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த பிப்ரவரியில் கர்நாடகா பா.ஜ. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் நேரில் சந்தித்து உதவி கேட்டுள்ளார். அப்போது தன் மகளுக்கு எடியூரப்பா பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக பெங்களூரு சதாசிவ நகர் போலீஸ் ஸ்டேசனில், அப்பெண் புகார் அளித்தார்.
போக்சோ சட்டத்தின் கீழ் எடியூரப்பா மீது போலீசார் மார்ச்சில் வழக்குப்பதிவு செய்தனர். லோக்சபா தேர்தல் நெருங்க உள்ளதால் என் மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு நிதியுதவி அளித்தேன் என தன் மீதான புகாரை மறுத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக எடியூரப்பா ஏற்கனவே மூன்று முறை போலீஸ் முன் ஆஜரான நிலையில் மீண்டும் ஆஜராக சதாசிவ நகர் போலீஸ் நிலைய போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.