மீண்டும் அருணாச்சல் பிரதேச முதல்வராகிறார் பெமா காண்டு
மீண்டும் அருணாச்சல் பிரதேச முதல்வராகிறார் பெமா காண்டு
மீண்டும் அருணாச்சல் பிரதேச முதல்வராகிறார் பெமா காண்டு
ADDED : ஜூன் 12, 2024 07:50 PM

இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் ஆளும் பா.ஜ., அரசின் முதல்வர் பெமா காண்டு மீண்டும் முதல்வராகும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளும், 2 லோக்சபா தொகுதிகளும் கடந்த ஏப்.,19ல் ஒரே நேரத்தில் தேர்தல் நடபெற்றது. இதில் முதல்வர் பெமா காண்டு உள்பட பா.ஜ.,வை சேர்ந்த 5 வேட்பாளர்களுக்கு எதிராக யாருமே வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
எனவே 5 பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியின்றி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 46 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில் தற்போதைய பா.ஜ., முதல்வரான பெமா காண்டு, மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட உள்ளார். இதன் மூலம் மூன்றாவது முறையாக பெமா காண்டு அருணாச்சல் முதல்வராகிறார்.