லஷ்கர் பயங்கரவாதியின் கருணை மனு : ஜனாதிபதி நிராகரிப்பு
லஷ்கர் பயங்கரவாதியின் கருணை மனு : ஜனாதிபதி நிராகரிப்பு
லஷ்கர் பயங்கரவாதியின் கருணை மனு : ஜனாதிபதி நிராகரிப்பு
ADDED : ஜூன் 12, 2024 06:19 PM

புதுடில்லி: டில்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பயங்கரவாதி முகமது ஆரிப் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.
கடந்த 2000 டிச.,22ல் டில்லி செங்கோட்டையில் புகுந்த பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜபுத்திர ரைபிள் படையினரை நோக்கி சராமாரியாக சுட்டனர். இச்சம்பவத்தில், இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் பலியாகினர்.
இத்தாக்குதல் தொடர்பாக லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிப் என்ற அஷ்பக் மற்றும் 6 பேருக்கு எதிரான வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், முகமது ஆரிப்பிற்கு 2005-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. மற்றவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனையை எதிர்த்து முகமது ஆரிப் டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை நிராகித்த நீதிபதி மரண தண்டனையை உறுதி செய்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அப்பீல் மனு கடந்த 2011ல் தள்ளுபடியானது. இதையடுத்து மரண தண்டனையை உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மரண தண்டனையை ரத்து செய்ய கோரி கடந்த சில மாதங்களுக்கு முன் முகமது ஆரிப் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவை இன்று பரிசீலித்த ஜனாதிபதி திரவுபதி முர்வு மனுவை நிராகரித்தார்.