சமாஜ்வாதி எம்.பி.,யை மணக்கிறார் ரிங்கு சிங்; கோலாகலமாக நடந்து முடிந்த நிச்சயம்
சமாஜ்வாதி எம்.பி.,யை மணக்கிறார் ரிங்கு சிங்; கோலாகலமாக நடந்து முடிந்த நிச்சயம்
சமாஜ்வாதி எம்.பி.,யை மணக்கிறார் ரிங்கு சிங்; கோலாகலமாக நடந்து முடிந்த நிச்சயம்
ADDED : ஜூன் 08, 2025 05:17 PM

லக்னோ: இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குவுக்கும், சமாஜ்வாதி எம்.பி., பிரியா சரோஜூக்கும் திருமண நிச்சயதார்த்தம் உத்தரபிரதேசத்தின் லக்னோவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாடி வருபவர் ரிங்கு சிங். இவரது அதிரடியான ஆட்டத்தால் கடந்த 2023ம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்தார். தொடர்ந்து இந்திய டி20 அணியில் இடம்பிடித்து வருகிறார்.
அண்மையில் ரிங்கு சிங்குவுக்கும், சமாஜ்வாதி எம்.பி., பிரியா சரோஜூக்கும் திருமணம் நடக்கப்போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், லக்னோவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரிங்கு சிங்குவுக்கும், சமாஜ்வாதி எம்.பி., பிரியா சரோஜூக்கும் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பி.சி.சி.ஐ.,யின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா கலந்து கொண்டு, இருவரையும் வாழ்த்தினார்.
அதேபோல, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், எம்.பி.,க்கள் ஜெயா பச்சன், டிம்பிள் யாதவ் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரவீன் குமார், பியூஷ் சாவ்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.