Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஸ்கூபா டைவிங் பயிற்சியில் மூச்சு திணறல்: துபாயில் இந்திய பொறியாளர் உயிரிழப்பு

ஸ்கூபா டைவிங் பயிற்சியில் மூச்சு திணறல்: துபாயில் இந்திய பொறியாளர் உயிரிழப்பு

ஸ்கூபா டைவிங் பயிற்சியில் மூச்சு திணறல்: துபாயில் இந்திய பொறியாளர் உயிரிழப்பு

ஸ்கூபா டைவிங் பயிற்சியில் மூச்சு திணறல்: துபாயில் இந்திய பொறியாளர் உயிரிழப்பு

ADDED : ஜூன் 08, 2025 05:31 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: துபாயில் ஸ்கூபா டைவிங் பயிற்சியின் போது 29 வயதான இந்திய பொறியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவை சேர்ந்த ஐசக் பால் ஒலக்கெங்கில் ஐக்கிய அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஈத் அல்-அதா விடுமுறையை கழிக்க துபாயில் உள்ள ஜூமேரா கடற்கரைக்கு தனது குடும்பத்தினருடன் சென்றார். ஐசக், அங்குள்ள ஸ்கூபா டைவிங் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு உயரிழந்தார்.

இது குறித்து உறவினர் டேவிட் பியாரிலோஸ் கூறியதாவது:

துபாயில் ஸ்கூபா டைவிங் பயிற்சியின் போது ஐசக்கிற்கு நீருக்கடியில் சுவாசிப்பதில் சிரமம் உருவாகி மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் விலகிச்சென்றார். மயக்கமடைந்த ஐசக், உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் முன்னரே அவர் உயிரிழந்தாக மருத்துவர்கள் கூறினர்.

இதனை தொடர்ந்து அவரது உடலை திருப்பி அனுப்புவதற்குத் தேவையான ஆவணங்களை தயார் படுத்த, தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து வருகிறோம்.

இவ்வாறு டேவிட் பியாரிலோஸ் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us