Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/குஜராத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: சிறுவன் உள்பட 5 பேர் பலி

குஜராத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: சிறுவன் உள்பட 5 பேர் பலி

குஜராத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: சிறுவன் உள்பட 5 பேர் பலி

குஜராத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: சிறுவன் உள்பட 5 பேர் பலி

ADDED : ஜூன் 08, 2025 05:38 PM


Google News
Latest Tamil News
அம்ரேலி: குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் 14 வயது சிறுவன் உள்பட 5 பேர் பலியாகினர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

அம்ரேலி மாவட்டத்தில் சவர்குண்ட்லா-மகுவா சாலையில் நேற்று நள்ளிரவில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த பைக்கும், காரும் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் ஒரு பெண் மற்றும் 14 வயது சிறுவன் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.

விபத்தைத் தொடர்ந்து, காரை ஓட்டி வந்த டிரைவர், வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

அதே நாளில் நள்ளிரவு சவர்குண்ட்லா நகரின் புறநகரில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்ட 5 பேர் கொண்ட ஒரே குடும்பத்தினர் 2 இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது அதே சாலையில் வந்து கொண்டு இருந்த கார் ஒன்று, அவர்களின் வாகனங்களின் மீது மோதியது.

இதில் 58 வயது பெண் ஒருவர், சம்பவ இடத்திலேயே பலியானார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த மற்றவர்கள் வனிதா ஜோஷி, ஜெய் ஜோஷி என்பது தெரியவந்துள்ளதாகவும், மற்றவர்கள் யார் என்பது விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இரவு நேரங்களில் மேற்கொள்ளும் வாகன பயணத்தின் போது அதிக கவனமும், கூடுதல் எச்சரிக்கையும் அவசியம். விழிப்புணர்வுடன் இருந்தால் விபத்துகளை தவிர்க்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us