Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பெங்களூரு கூட்டநெரிசல் விவகாரம்; பா.ஜ.,வினர் போராட்டம்

பெங்களூரு கூட்டநெரிசல் விவகாரம்; பா.ஜ.,வினர் போராட்டம்

பெங்களூரு கூட்டநெரிசல் விவகாரம்; பா.ஜ.,வினர் போராட்டம்

பெங்களூரு கூட்டநெரிசல் விவகாரம்; பா.ஜ.,வினர் போராட்டம்

ADDED : ஜூன் 08, 2025 05:10 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: பெங்களுரு கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி கடந்த 4ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து பெங்கரூளுவுக்கு திரும்பியது. அப்போது, விதான் சவுதா மற்றும் சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒரே சமயத்தில் திரண்டனர். இதனால் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும், கர்நாடகா அரசுக்கும் இந்த சம்பவம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக சித்தராமையா அரசு கைகாட்டி விட்டது.

இந்த நிலையில், கர்நாடகா அரசைக் கண்டித்து பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தலா ரூ.25 லட்சம் நிவாரணத்தை ரூ.1 கோடியாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us