லோக்சபா தேர்தலில் இடஒதுக்கீடு மனு நிராகரிப்பு
லோக்சபா தேர்தலில் இடஒதுக்கீடு மனு நிராகரிப்பு
லோக்சபா தேர்தலில் இடஒதுக்கீடு மனு நிராகரிப்பு
ADDED : ஜன 13, 2024 12:21 AM

புதுடில்லி: லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா சட்டமாக்கப்பட்டாலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடித்தபின் தான், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், இச்சட்டத்தை வரும் லோக்சபா தேர்தலில் உடனே அமல்படுத்தக்கோரி வழக்கறிஞர் யோகமயா என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, 'ஏற்கனவே, காங்கிரசைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயா தாக்குர், இது தொடர்பாக பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
'எனவே, இந்த மனுவை திரும்பப்பெற்று, இடையீட்டு மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறோம்' என்றனர்.