வெப்பநிலை அதிகரிப்பால் 'ரெட் அலர்ட்'
வெப்பநிலை அதிகரிப்பால் 'ரெட் அலர்ட்'
வெப்பநிலை அதிகரிப்பால் 'ரெட் அலர்ட்'
ADDED : ஜூன் 11, 2025 08:18 PM

புதுடில்லி:தலைநகர் டில்லியில் வெப்பநிலை, 45 டிகிரி செல்ஷியஸை தாண்டியதால், வானிலை ஆய்வு மையம் டில்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டில்லியில் நேற்று மதியம், 2:00 மணிக்கு வெப்பநிலை 44 முதல் 46 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகி இருந்தது.
சப்தர்ஜங்க் - 43.8, அயநகர் - 45.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.-
வானிலை ஆய்வு மைய மூத்த விஞ்ஞானி டாக்டர் நரேஷ் குமார் கூறியதாவது:
டில்லி மட்டுமின்றி அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உட்பட வடமேற்கு இந்தியா முழுவதும் வெப்பம் அடுத்த இரண்டு நாட்களுக்கு நீடிக்கும். டில்லியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்பதால், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மேற்கத்திய இடையூறு காரணமாக நாளை இரவு லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கலாம். குழந்தைகள், முதியோர் கவனமாக இருக்க வேண்டும். தேவையின்றி வெளியில் நடமாடக்கூடாது. வரும், 14ம் தேதிக்குப் பின், வெப்பநிலை சற்று குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.