துவாராகா விபத்து 3 பேர் உடல்கள் ஒப்படைப்பு
துவாராகா விபத்து 3 பேர் உடல்கள் ஒப்படைப்பு
துவாராகா விபத்து 3 பேர் உடல்கள் ஒப்படைப்பு
ADDED : ஜூன் 11, 2025 08:18 PM
புதுடில்லி:துவாரகா தீ விபத்தில், எட்டாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த, மூன்று பேர் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்குப் பின் குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.
துவாரகாவில் ஷாபாத் அடுக்குமாடி குடியிருப்பின், எட்டு மற்றும் ஒன்பது ஆகிய தளங்கள் நேற்று மாலை தீப்பற்றி எரிந்தது.
எட்டாவது மாடியில் குடியிருந்த யஷ் யாதவ்,35, அவரது மகள் ஆஷிமா,12, மருமகண் சிவம்,11, ஆகியோருடன் மாடியில் இருந்து குதித்தார்.
பலத்த காயம் அடைந்த மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மூவரும் ஏற்கனவே இறந்து விட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
யாஷ் யாதவ் மனைவி மற்றும் 18 வயது மகன் லேசான தீக்காயங்களுடன் தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்டனர்.
மூவர் உடலும் உடற்கூறு ஆய்வுக்குப் பின், குடும்பத்தினரிடம் நேற்று மதியம் ஒப்படைக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் மூவர் உடலும் தகனம் செய்யப்படும் என யாதவின் குடும்ப நண்பர் அமித் பண்டாரி கூறினார்.