9 வயது சிறுமி கொலையில் வாலிபர் தப்ப முயன்ற போது சுட்டுப் பிடிப்பு
9 வயது சிறுமி கொலையில் வாலிபர் தப்ப முயன்ற போது சுட்டுப் பிடிப்பு
9 வயது சிறுமி கொலையில் வாலிபர் தப்ப முயன்ற போது சுட்டுப் பிடிப்பு
ADDED : ஜூன் 11, 2025 08:16 PM
புதுடில்லி,:வடகிழக்கு டில்லி தயால்பூரில், ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து சூட்கேஸில் அடைத்த வழக்கில், 28 வயது வாலிபர் உத்தர பிரதேசத்தில் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் கைது செய்யப்பட்டார்.
தயால்பூர் நேரு விஹாரில், 7ம் தேதி இரவு உறவினர் வீட்டுக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் தேடிய போது அதே தெருவில் அடுக்குமாடி குடியிருப்பின் இரு வீட்டுக்குள் ஒரு சூட்கேஸில் சிறுமி உடல் கண்டெடுக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வில், அந்தச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இந்த வழக்கில் குற்றவாளியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் அருகே, 28 வயது வாலிபரை கைது செய்து டில்லிக்கு அழைத்து வந்தனர்.
டில்லியின் வெல்கம் காலனி ஜீல் பூங்கா அருகே, இயற்கையின் உபாதை கழிக்கச் செல்வதாக வாலிபர் கூறினார். வேனில் இருந்து இறங்கியவுடன் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து கான்ஸ்டபிள் அமித் மான் மார்பில் இரண்டு முறை கிழித்து விட்டு தப்பி ஓடினார். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். குண்டு பாய்ந்த குற்றவாளி மற்றும் காயமடைந்த கான்ஸ்டபிள் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதற்காக வெல்கம் காலனி போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர்.