சோமநாதர் கோவிலின் 7 ஏக்கர் நிலம் மீட்பு
சோமநாதர் கோவிலின் 7 ஏக்கர் நிலம் மீட்பு
சோமநாதர் கோவிலின் 7 ஏக்கர் நிலம் மீட்பு
ADDED : ஜன 28, 2024 02:08 AM
ஆமதாபாத், குஜராத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சோமநாதர் கோவிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள், குடிசைகளை மாநில வருவாய் துறையினர் நேற்று அகற்றினர்.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள கிர் சோமநாத் மாவட்டத்தின், பிரபாஸ் பட்டனத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சோமநாதர் கோவில் உள்ளது.
கோவிலின் பின்புறம் கோவில் மற்றும் அரசுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்கும்படி மாநில வருவாய் துறை, கலெக்டருக்கு உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட 21 வீடுகள், 150 குடிசைகளை நேற்று வருவாய் துறையினர் அகற்றினர்.
அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க ஏராளமான போலீசார் மற்றும் அதிகாரிகள் குவிக்கப்பட்டனர்.
ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்த பொருட்களை வேறு இடத்துக்கு மாற்ற, டிராக்டர்கள் மற்றும் தொழிலாளர்களின் உதவி வழங்கப்பட்டன.