அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
ADDED : ஜூலை 03, 2024 10:48 PM

புதுடில்லி: உடல் பரிசோதனைக்காக பா.ஜ.,, மூத்த தலைவர் அத்வானி,96 மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன் பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானிக்கு கடந்த ஜூன் 26-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பின் காரணமாக ஏற்படும் உடல்நல பிரச்னைகள் அத்வானிக்கு இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.
அவருக்கு சிறுநீரகவியல் மருத்துவத் துறையைச் சேர்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர் சிகிச்சைக்கு பின் குணமடந்து டிஸ்சார்ஜ் செய்யபட்டார்.
இந்நிலையில் மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.