ராகுல் பேச்சு எதிரொலி: அக்னி வீரர் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி
ராகுல் பேச்சு எதிரொலி: அக்னி வீரர் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி
ராகுல் பேச்சு எதிரொலி: அக்னி வீரர் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி
ADDED : ஜூலை 03, 2024 11:17 PM

புதுடில்லி: பாராளுமன்றத்தில் காங்., எம்.பி., ராகுல் பேசியதன் எதிரொலியாக இன்று அக்னி வீர் திட்டத்தில் தேர்வாகி பணியின் போது உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு ரூ. 98 லட்சம் நிதி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 01 ம் தேதியன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் காங். எம்.பி.,யுமான ராகுல் பேசினார். அதில் அக்னி வீர் திட்டத்தில் தேர்வானவர்களை, ராணுவ வீரர்கள் என கூறமுடியாத நிலை உள்ளது. ஆறு மாதங்கள் பயிற்சி தந்து அவர்களை பயன்படுத்திவிட்டு துாக்கி எறிகிறீர்கள். அவர்கள் உயிரிழந்தால் ஓய்வூதியம் கிடைக்காது. உதவியும் கிடையாது என்றார்.
இதற்கு பதிலடியாக மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் , எதிர்க்கட்சி தலைவர் பொய் தகவல் சொல்கிறார். அக்னிவீர் திட்டத்தில் தேர்வானவர்கள் உயிரிழந்தால் ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது என்றார்.
இந்நிலையில் இந்திய ராணுவம் தனது ‛ எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அக்னிவீர் திட்டத்தில் தேர்வாகி பணியின் போது அஜய் குமார் என்ற வீரர் உயிரிழந்தார். அவருக்கு ரூ. 1 கோடி நிவாரணமும், இதர சலுகையாக ரூ. 65 லட்சம் என ரூ.1 கோடியே 65 லட்சம் செட்டில்மெண்ட் செய்யப்பட்டுள்ளது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.