Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ புதிய பங்களாவுக்கு மாறுகிறார் ராகுல்

புதிய பங்களாவுக்கு மாறுகிறார் ராகுல்

புதிய பங்களாவுக்கு மாறுகிறார் ராகுல்

புதிய பங்களாவுக்கு மாறுகிறார் ராகுல்

ADDED : ஜூன் 20, 2025 01:11 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், டில்லியில் தனக்கு ஒதுக்கப்பட்ட சுனேரி பாக் பங்களாவில் குடியேற சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லோக்சபா எம்.பி.,யாக தேர்தெடுக்கப்பட்ட பின், 2005- முதல் டில்லியின், 12 துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவில் ராகுல் வசித்து வந்தார்.

அவதுாறு வழக்கு


இதனிடையே, அவதுாறு வழக்கில் ராகுல், குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவரது எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. இதனால் 2023ல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரசு குடியிருப்பை காலி செய்தார்.

அதன் பின் தாயார் சோனியாவின் 10, ஜன்பத் இல்லத்திற்கு குடிபெயர்ந்தார். அவரது தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்ட பிறகும் அங்கேயே வசித்து வந்தார். பின்னர் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர் கேபினெட் அமைச்சருக்கான அந்தஸ்தை பெற்றார்.

இதனால் அவருக்கு டைப் 8 பங்களா வழங்கவேண்டும். அதன்படி, சுனேரி பாக் சாலையில் பங்களா எண் ஐந்து அவருக்கு ஒதுக்கப்பட்டது. இது கர்நாடக பாஜ., தலைவர் ஏ.நாராயணசாமி வசித்து வந்த பங்களா. அவர், 2021 முதல் 2024 வரை மோடி அரசில் சமூக நீதித்துறை இணையமைச்சராக இருந்தார்.

ஒப்புதல்


ஆனால் அந்த பங்களாவில் குடியேற ராகுல் சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அதற்கு ஒப்புக்கொண்ட நிலையில், நேற்று தன் பிறந்தநாளையொட்டி, சில பொருட்கள் சுனேரி பாக் இல்லத்திற்கு கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகின.

ஜூலை 21ல் பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன், ராகுல் அந்த பங்களாவில் நிரந்தரமாக குடிபெயர்வார் என கூறப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us