ADDED : பிப் 24, 2024 11:27 PM

கடந்த 2021ல் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிய போது, குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படும் என அரசு வாக்குறுதி அளித்தது. மூன்று ஆண்டுகளாகியும் சட்டம் கொண்டு வரவில்லை.
மணீஷ் திவாரி, லோக்சபா எம்.பி., - காங்.,
ராகுலின் பார்வை வேறு!
வாரிசு அரசியல்வாதியான ராகுல், அவரது கண்ணோட்டத்தில் தான், நாட்டின் பொருளாதாரத்தை பார்ப்பார். அதனால் தான் மத்திய அரசு சில தனியார் முதலாளிகளின் கையில் இருப்பதாக அவர் கூறுகிறார்.
தேஜஸ்வி சூர்யா, லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
ஒன்றும் செய்யாத அரசு!
பெண் முதல்வர் ஆளும் மேற்கு வங்கத்தில், பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கின் நிலை என்ன எனும் கேள்வி எழுகிறது.
அனுராக் தாக்குர், மத்திய அமைச்சர், பா.ஜ.,