UPDATED : பிப் 24, 2024 05:21 PM
ADDED : பிப் 24, 2024 03:27 PM
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் போலீஸ் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 50 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற்ற தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்து சமூகவலைத்தளங்களில் பரவியதாக வெளியான புகாரின் அடிப்படையில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி 6 மாதங்கள் கழித்து தேர்வு நடத்தப்படும் என உ.பி அரசு தெரிவித்துள்ளது.