விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.8 லட்சம் வழங்க உத்தரவு
விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.8 லட்சம் வழங்க உத்தரவு
விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.8 லட்சம் வழங்க உத்தரவு
ADDED : ஜூன் 15, 2025 09:37 PM
புதுடில்லி:சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு 8.2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 2016ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி சிலர், சாலையில் பைக் ரேஸ் நடத்தினர். பைக்குள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டிக் கொண்டு அதிவேகமாக சென்றன. அதில் ஒரு பைக், சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த அக்லக் அலி என்பவர் மீது மோதியது. தூக்கி வீசப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். ஆனால், இடது காலில் நிரந்தர ஊனம் ஏற்பட்டது.
இந்த வழக்கை, மோட்டார் வாகன விபத்து உரிமைகோரல் தீர்ப்பாய தலைவர் ஷெல்லி அரோரா விசாரித்தார்.
விபத்தில் பாதிக்கப்பட்ட அக்லக் அலிக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி, வலி மற்றும் துன்பத்தை எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது. இருப்பினும் பண இழப்பீடு என்பது சட்டப்படி தர வேண்டிய நிவாரணம். இதனால், விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள உதவும்.
விபத்தில் பாதிக்கப்பட்ட அக்லிக் அலிக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ., லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவை, 8.2 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.