நீட் மறுதேர்வு கிடையாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு கிடையாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு கிடையாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

மறு தேர்வு
விசாரணையின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ''சமூக சீர்கேடுகள் தொடர்பான விவகாரம் என்பதால் நீட் தேர்வுக்கு இந்த நீதிமன்றம் முக்கியத்துவம் வழங்குகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இன்றைய வழக்கு விசாரணைக்காக காத்திருக்கிறார்கள். நீட் தேர்வில் குளறுபடி புகார் எழுந்துள்ளதால், கடந்த மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யவும் முடியாது; அனைத்து மாணவர்களுக்கும் மறு தேர்வை எழுத வேண்டும் என உத்தரவிடவும் முடியாது'' என்றார்.
தேர்வு மையங்கள் வாரியாக ரிசல்ட்
நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாக சனிக்கிழமை (ஜூலை 20) மதியத்திற்குள் வெளியிட வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு மத்திய அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், 'தேர்வு மையங்கள் வாரியாக முடிவுகளை வெளியிட்டால் தான் நடந்ததை அறிய முடியும்' எனக் குறிப்பிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 22க்கு ஒத்திவைத்தனர்.