சாலையோர கடையில் சிற்றுண்டியை ருசித்த நீடா அம்பானி
சாலையோர கடையில் சிற்றுண்டியை ருசித்த நீடா அம்பானி
சாலையோர கடையில் சிற்றுண்டியை ருசித்த நீடா அம்பானி
ADDED : ஜூன் 26, 2024 09:04 AM

வாரணாசி: காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா, பிறகு அங்குள்ள சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் மகன் ஆனந்த் திருமணம் அடுத்த மாதம் 12ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ அரங்கில் நடைபெறுகிறது. ராதிகா மெர்ச்சண்டை அவர் மணம் முடிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மகன் திருமணத்தை முன்னிட்டு நீடா அம்பானி காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இது குறித்து பேசிய அவர், மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். ஹிந்து மரபுப்படி கடவுளின் ஆசிர்வாதத்தை நாடுகிறோம். திருமணத்திற்கு கடவுளை அழைத்திருப்பதாக தெரிவித்தார்.
பிறகு அவர், அங்குள்ள சாலையில் இருந்த சிற்றுண்டி கடைக்கு சென்று மக்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். உருளைக்கிழங்கு மசாலாவில் செய்யப்பட்ட சிற்றுண்டியை ருசித்த அவர், அதன் சுவை மற்றும் தயாரிப்பு குறித்து கடை ஊழியர்களுடன் பேசினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.