கேரளா சட்டசபை தேர்தலில் இது புதுசு; கூடுதலாக வருகிறது 6,500 ஓட்டுச்சாவடிகள்
கேரளா சட்டசபை தேர்தலில் இது புதுசு; கூடுதலாக வருகிறது 6,500 ஓட்டுச்சாவடிகள்
கேரளா சட்டசபை தேர்தலில் இது புதுசு; கூடுதலாக வருகிறது 6,500 ஓட்டுச்சாவடிகள்
ADDED : ஜூன் 14, 2025 06:53 AM

திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டசபை தேர்தலின் முக்கிய கட்டமாக புதியதாக 6500 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
கேரள சட்டசபைக்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. குறுகிய கால கட்டமே உள்ள நிலையில், அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் ஆரம்பித்துள்ளது. தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான நடைமுறைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து முதன்மை தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் கூறியதாவது; மாநிலத்தில் இந்த முறை 6500 புதிய ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட இருக்கின்றன. அவை அனைத்தும் 2026 தேர்தலின் போது பயன்பாட்டில் இருக்கும்.
நிலம்பூர் இடைத்தேர்தலில் 59 புதிய ஓட்டுச்சாவடிகள் புதியதாக அமைக்கப்படும். தற்போது ஒரு ஓட்டுச்சாவடியில் 1500 வாக்காளர்கள் உள்ளனர். அது இனி 1200 ஆக மாற்றும் பணிகள் ஒரு மாதத்தில் முடிந்து விடும்.
இதற்காக புதிய ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படாது. பள்ளிகள், கல்லூரிகளில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும். வாக்காளர்களின் மொபைல் எண்கள் பதிவு செய்யும் வகையில், ஓட்டுச்சாவடி அருகே டிபாசிட் கவுன்ட்டர்கள் அமைக்கப்படும். நிலம்பூர் இடைத்தேர்தலிலே இது நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த டிபாசிட் கவுன்ட்டர்களில் ஓட்டு போடுபவர்கள் தங்கள் மொபைல் போனை வைத்து விட்டுச் செல்லலாம். அதற்காக அவர்களுக்கு தனி டோக்கன் எண் இம்முறை அறிமுகப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.