பிரதமராக மோடி ஹாட்ரிக் !...:ராஜ்நாத், அமித்ஷா உள்ளிடோரும் பதவியேற்பு
பிரதமராக மோடி ஹாட்ரிக் !...:ராஜ்நாத், அமித்ஷா உள்ளிடோரும் பதவியேற்பு
பிரதமராக மோடி ஹாட்ரிக் !...:ராஜ்நாத், அமித்ஷா உள்ளிடோரும் பதவியேற்பு

30 கேபினட் அமைச்சர்கள் உள்ளிட்ட 71 அமைச்சர்கள் பதவியேற்பு
பிரதமராக
மோடி பதவியேற்றதை தொடர்ந்து இரண்டாவது நபராக ராஜ்நாத்சிங்
பதவியேற்றார். இவர்களை தொடர்ந்து அமித்ஷா
,நிதின்கட்கரி,ஜெ.பி.நட்டா,சிவராஜ்சிங் சவுகான், நிர்மலா சீதாராமன்,
ஜெய்சங்கர் , மனோகர் லால் கட்டார்,குமாரசாமி,,பியூஸ் கோயல், தர்மேந்திர
பிரதான் ஜித்தன்ராம் மாஞ்சி ,லாலன்சிங் ,சர்பானந்த சோனேவால்,வீரேந்திர
குமார்,ராம் மோகன் நாயுடு ,பிரகலாத் ஜோஷி,ஜூவல் ஓரம், கிரிராஜ்சிங், அஸ்வினி
வைஷ்ணவ்,ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கஜேந்திர சிங் செகாவத்,அன்னபூர்ணா
தேவி,,கிரண்ரிஜிஜூ, ஹர்தீப் சிங்பூரி,
6 முன்னாள் முதல்வர்கள் அமைச்சர்களாக பதவியேற்பு
சிவராஜ் சிங் சவுகான், ராஜ்நாத்சிங், மனோகர் லால் கட்டார், ஷர்பானாந்த சோனேவால்,ஜித்தன் ராம் மன்ஜி மற்றும் குமாரசாமி ஆகிய 6 முன்னாள் முதல்வர்கள் தற்போது மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
ஓ.பி.சி., பிரிவில் 27 பேர்
இன்று பதவியேற்ற மத்திய அமைச்சரவையில், 27 பேர், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர்கள். 10 பேர் பட்டியல் பிரிவினர், 5 பேர் பழங்குடியினர், 5 பேர் சிறுபான்மையினர்.
மாநிலங்கள் வாரியாக அமைச்சர்கள் எண்ணிக்கை
உ.பி-9பீஹார்-8
வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பு
பிரதமர்
பதவியேற்பு நிகழ்ச்சியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர்
முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், இலங்கை அதிபர் ரணில்
விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், செஷல்ஸ் அதிபர் வேவல்
ராம்கலவன், பூடான் பிரதமர் ஷெரீன் டோப்கே ஆகிய நாடுகளின் தலைவர்கள். மோடி
பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர் கார்கேவும் இந்த
விழாவில் பங்கேற்றார்.
திரை பிரபலங்கள் பங்கேற்பு
பாலிவுட்
நடிகர் ஷாரூக்கான், அக்சய்குமார், தெலுங்கு நடிகர் நாகேந்திரபாபு, நடிகர்
ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கவர்னர்கள் பங்கேற்பு
புதுச்சேரி மற்றும் ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன், கேரள கவர்னர் ஆரிப்கான் பங்கேற்னர்.