ஜம்முவில் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் : 10 பேர் பலி;33 பேர் படுகாயம்
ஜம்முவில் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் : 10 பேர் பலி;33 பேர் படுகாயம்
ஜம்முவில் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் : 10 பேர் பலி;33 பேர் படுகாயம்
ADDED : ஜூன் 09, 2024 10:15 PM

ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் : 10 பேர் பலியாயினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு கத்ரா பகுதிக்கு பஸ்சில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அப் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பஸ்சின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் நிலைகுலைந்த பஸ் பள்ளதாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் பக்தர்கள் 10 பேர் வரை பலியாயினர். மேலும் 33 பேர் படுகாயம் அடைந்தனர்.மாலை 6 மணி அளவில் நடந்த இச்சம்பவத்தை தொடர்ந்து போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் உதவியுடன் இரவு 8.10 மணி அளவில் பயணிகளை மீ்ட்டனர்.
பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து காங்., தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் ராகுல், ஜம்மு காஷ்மீரின் தேசிய மநாட்டு கட்சி தலைவர் உமர்அப்துல்லா கண்டனம் தெரிவித்து உள்ளனர்.