Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி

3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி

3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி

3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி

UPDATED : ஜூன் 10, 2024 12:53 AMADDED : ஜூன் 09, 2024 07:25 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: நரேந்திர மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து இன்று(ஜூன் 09) மாலை 7.15 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு


பிரதமராக மோடி பதவியேற்றதை தொடர்ந்து இரண்டாவது நபராக ராஜ்நாத்சிங் பதவியேற்றார். இவர்களை தொடர்ந்து அமித்ஷா ,நிதின்கட்கரி,ஜெ.பி.நட்டா,சிவராஜ்சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் , மனோகர் லால் கட்டார்,குமாரசாமி,,பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான் ஜித்தன்ராம் மாஞ்சி ,லாலன்சிங் ,சர்பானந்த சோனேவால்,வீரேந்திர குமார்,ராம் மோகன் நாயுடு ,பிரகலாத் ஜோஷி,ஜூவல் ஓரம்,கிரிராஜ்சிங்,,அஸ்வினி வைஷ்ணவ்,ஜோதிர் ஆதித்ய சிந்தியா,கஜேந்திர சிங் செகாவத்,அன்னபூர்ணா தேவி,,கிரண்ரிஜிஜூ, ஹர்தீப் சிங்பூரி

மன்சுக் மாண்டவியா,கிஷன்ரெட்டி,,சிராக்பஸ்வான்,சி.ஆர்.பாட்டீல்,ராவ் இந்தர்ஜித்சிங்,

ஜிதேந்திரசிங்,அர்ஜூன்ராம்மேகவால்,பிரதாப் ராவ்,ஜெயந்த் சவுத்ரி ,ஜிதின் பிரசாதா,ஸ்ரீபத் நாயக்,பங்கஜ் செளத்ரி,கிர்ஜன் பால் குர்ஜார்,ராம்தாஸ்அத்வாலே,ராம்நாத் தாக்கூர் ,நித்யானந்த் ராய்,அனுப்பிரியா பட்டேல்,சோமன்னா,சந்திரசேகர் பொம்மசனி,எஸ்.பி.,சிங் பஹேல்,ஷோபா கரண்டலேஜே,கீர்த்தி வர்தன்சிங்,பி.எல்.வர்மா, சாந்தனு தாக்கூர்,சுரேஷ்கோபி,முருகன்

அஜய் டம்டா ,பண்டி சஞ்சய் குமார்,கமலேஷ் பஸ்வான்,,பஹிரத் செளத்ரி,சதீஷ் சந்திர தூபே

சஞ்சய் சேட்,ரவ்னீத்சிங் பிட்டு,துர்கா தாஸ் உய்கி, ரக்சா கட்சே,சுகந்து மஜூம்தார்

சாவித்ரி தாக்கூர்,தோஹன் சாஹூ,ராஜ்பூஷன் சவுத்ரி,,பூபதி ராஜூ ஸ்ரீனிவாச வர்மா,ஹர்ஷ் மல்ஹோத்ரா,நிமுபென் பாம்பனியா,முரளிதர் மோஹோல் ,ஜார்ஜ் குரியன்,பவித்ர மார்கரீட்டா உள்ளிட்ட 72 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

36 கேபினட் அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் 36 பேர் என மொத்தமாக 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

6 முன்னாள் முதல்வர்கள் அமைச்சர்கள்


சிவராஜ்சிங் சவுகான், ராஜ்நாத்சிங், குமாரசாமி, மனோகர்லால் கட்டார், சர்பானந்தா சோனாவால், ஜித்தன்ராம் மஞ்சி ஆகிய 6 முன்னாள் முதல்வர்கள் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பு


பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், செஷல்ஸ் அதிபர் வேவல் ராம்கலவன், பூடான் பிரதமர் ஷெரீன் டோப்கே ஆகிய நாடுகளின் தலைவர்கள். மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர் கார்கேவும் இந்த விழாவில் பங்கேற்றார்.

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்,முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்,முரளிமனோகர் ஜோஷி,ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி , கவுதம் அதானி,முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித்பவார்,காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூன கார்கே, கங்கனா ரனாவத் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், லோக்சபா முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லா அமமுக பொதுசெயலர் தினகரன், முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே.சிங் மற்றும் பல்வேறு நாட்டு துாதர்கள் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

திரை பிரபலங்கள் பங்கேற்பு


பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், அக்சய்குமார், தெலுங்கு நடிகர் நாகேந்திரபாபு, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கவர்னர்கள் பங்கேற்பு


புதுச்சேரி மற்றும் ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன், கேரள கவர்னர் ஆரிப்கான் பங்கேற்னர்.

பதவியேற்பு விழாவையொட்டி டில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுஇருந்தன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us