ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., நாகனகவுடா கந்தகூர் மரணம்
ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., நாகனகவுடா கந்தகூர் மரணம்
ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., நாகனகவுடா கந்தகூர் மரணம்
ADDED : ஜன 29, 2024 07:21 AM

யாத்கிர்: ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., நாகனகவுடா கந்தகூர், மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தேவகவுடா, குமாரசாமி இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
யாத்கிர் மாவட்டம், குர்மித்கல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., நாகனகவுடா கந்தகூர், 79. நேற்று காலை குர்மித்கல்லில் உள்ள வீட்டில் இருந்த, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். அவரை குடும்பத்தினர் மீட்டு, யாத்கிரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். மாரடைப்பால் மரணம் அடைந்ததாக, டாக்டர்கள் கூறினர். இதன் பின்னர், அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம், குர்மித்கல்லுக்கு கொண்டு செல்லப்பட்டது.
யாத்கிர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சன்னாரெட்டி பாட்டீல், ம.ஜ.த., - காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மரணம் அடைந்த நாகனகவுடா, தேவகவுடா குடும்பத்துடன் நெருக்கமாக அடையாளம் காணப்பட்டவர். ஆரம்பத்தில் இருந்தே ம.ஜ.த.,வில் இருந்தவர். நாகனகவுடா மறைவுக்கு தேவகவுடா, குமாரசாமி இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
கடந்த 2018 சட்டசபை தேர்தலில், நாகனகவுடா முதல்முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார். கடந்த ஆண்டு மே மாதம் நடந்த, சட்டசபை தேர்தலிலும் அவருக்கு, 'சீட்' வழங்க ம.ஜ.த., முடிவு செய்தது.
ஆனால் வயதை காரணம் காட்டி, அவர் மறுத்தார். இதனால் அவரது மகன் ஷரன்கவுடா கந்தகூருக்கு, ம.ஜ.த., 'சீட்' வழங்கியது. அவரும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., வானார்,