வங்கதேசத்தில் என்ன நிலைமை? 'பரபர' சூழலில் கூடியது அனைத்துக் கட்சிக் கூட்டம்
வங்கதேசத்தில் என்ன நிலைமை? 'பரபர' சூழலில் கூடியது அனைத்துக் கட்சிக் கூட்டம்
வங்கதேசத்தில் என்ன நிலைமை? 'பரபர' சூழலில் கூடியது அனைத்துக் கட்சிக் கூட்டம்

அமைச்சர்கள் பங்கேற்பு
டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கே, டி.ஆர்.பாலு ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நடவடிக்கைகள்
கூட்டத்துக்கு தலைமை ஏற்ற வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வங்கதேசத்தில் தற்போது உள்ள நிலவரம், இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி விரிவாக விளக்கிக் கூறினார். டில்லியில் தற்போது தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தியர்கள் பாதுகாப்பு
மேலும் வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் நிலைமை, சர்வதேச எல்லை பாதுகாப்பு குறித்தும் அவர் விவரித்ததாக தெரிகிறது. இதனிடையே, டில்லியில் வந்து இறங்கிய ஷேக் ஹசீனா பயணித்த ராணுவ விமானம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.