அமைச்சர் பெரியசாமி வழக்கு: தமிழக அரசுக்கு அவகாசம்
அமைச்சர் பெரியசாமி வழக்கு: தமிழக அரசுக்கு அவகாசம்
அமைச்சர் பெரியசாமி வழக்கு: தமிழக அரசுக்கு அவகாசம்
ADDED : மார் 20, 2025 04:27 AM

தமிழக அமைச்சர் பெரியசாமி தொடர்புடைய வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் நான்கு வாரகால அவகாசம் வழங்கியுள்ளது.
கடந்த, 2008-ல் தமிழக வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலரான கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
விடுவிப்பு
அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த பெரியசாமி, தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி, 2012ல் அவர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
வழக்கை விசாரித்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெரியசாமியை வழக்கிலிருந்து விடுவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார். முறையாக ஒப்புதல் பெற்று, பெரியசாமி மீதான முறைகேடு வழக்கை நடத்த வேண்டும் என, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.
ேமல்முறையீடு
மேலும், வழக்கை, 2024, ஜூலை மாதத்துக்குள் விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் பெரியசாமி மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நான்கு வார காலம் அவகாசம் வழங்கி, வழக்கினை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.