Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஜம்மு - காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

ஜம்மு - காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

ஜம்மு - காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

ஜம்மு - காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

ADDED : ஜன 03, 2024 12:54 AM


Google News
ஜம்மு, ஜன. ஜம்மு - காஷ்மீரில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவானது.

ஜப்பானில் நேற்று முன்தினம் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு, சுனாமியும் தாக்கிய நிலையில், நம் நாட்டின் ஜம்மு - காஷ்மீரில் நேற்று காலை 11: 33 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த தகவலை தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது. ஜம்மு நகருக்கு அருகே 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அப்பகுதியில் வீடுகள், கடைகளில் இருந்தோர் லேசான நில அதிர்வை உணர்ந்ததாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இருப்பினும் எந்தவொரு உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us