ரூ.48 லட்சம் மோசடி செய்தவர் மஹாராஷ்டிராவில் பிடிபட்டார்
ரூ.48 லட்சம் மோசடி செய்தவர் மஹாராஷ்டிராவில் பிடிபட்டார்
ரூ.48 லட்சம் மோசடி செய்தவர் மஹாராஷ்டிராவில் பிடிபட்டார்
ADDED : மே 21, 2025 03:26 AM
புதுடில்லி:நிதி நிறுவன நிர்வாக இயக்குனர் எனக்கூறி, வடக்கு டில்லியில் பலரிடம் 48 லட்சம் ரூபாய் முதலீடு வசூலித்து மோசடி செய்தவர், மஹாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிரா மாநிலம் பால்கரின் வான்கானில் வசிப்பவர் ஜிதேந்திர சர்மா. நிதி நிறுவனத்தின் பெயரில் போலி மொபைல் போன் செயலி உருவாக்கினார். வடக்கு டில்லியில் ஏராளமானோரிடம் அந்த மொபைல் போன் செயலி வாயிலாக 48 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு வசூலித்தார்.
ஆனால், முதிர்வு அடைந்தும் முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்கவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. தேசிய சைபர் கிரைம் புகார் இணையதளத்தில் இது தொடர்பாக 46 பேர் புகார் செய்திருந்தனர்.
வினய் சிங் என்பவர் நேரில் அளித்த அளித்த புகாரைத் தொடர்ந்து, மார்ச் 17ம் தேதி டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து மேலும் பலர் நேரில் புகார் கொடுத்தனர்.
விசாரணையில், பரிதாபாத்தில் இதேபோன்ற சைபர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்த ஜிதேந்திர சிங், இந்த மோசடிகளையும் செய்திருப்பது தெரிய வந்தது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கடந்த 16ம் தேதி, மஹாராஷ்டிர மாநிலம் வான்கான் நகரில் ஜிதேந்திர சர்மாவை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து நான்கு மொபைல் போன்கள், ஒரு லேப் டாப், ஒரு கடிகாரம், 80,000 ரூபாய் பணம், இரண்டு டெபிட் கார்டுகள், இரண்டு பென் டிரைவ்கள், ஒரு நிதி நிறுவன முத்திரை, காசோலை புத்தகங்கள் மற்றும் ஒரு வங்கி பாஸ்புக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணை நடக்கிறது.