குறைப்பு * எம்.எல்.ஏ.,, தொகுதி மேம்பாட்டு நிதி * ரூ.15 கோடியில் இருந்து ரூ. 5 கோடி ஆனது
குறைப்பு * எம்.எல்.ஏ.,, தொகுதி மேம்பாட்டு நிதி * ரூ.15 கோடியில் இருந்து ரூ. 5 கோடி ஆனது
குறைப்பு * எம்.எல்.ஏ.,, தொகுதி மேம்பாட்டு நிதி * ரூ.15 கோடியில் இருந்து ரூ. 5 கோடி ஆனது
ADDED : மே 21, 2025 03:26 AM
புதுடில்லி,:எம்.எல்.ஏ.,க்களுக்கான வருடாந்திர தொகுதி மேம்பாட்டு நிதி 15 கோடி ரூபாயில் இருந்து, ஐந்து கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
டில்லி சட்டசபைத் தேர்தல் பிப்ரவரியில் நடந்தது. அதற்கு சில மாதங்களுக்கு முன் கடந்த ஆண்டு அக்டோபரில், ஆம் ஆத்மி அரசு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியை 10 கோடி ரூபாயில் இருந்து 15 கோடி ரூபாயாக உயர்த்தியது.
பிப்ரவரியில் நடந்த சட்டசபைத் தேர்தலில், மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வென்ற பா.ஜ., ஆட்சியைக் கைப்பற்றியது.
தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்த ஆம் ஆத்மி, 22 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றது.
காங்கிரஸ் கட்சியோ, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
டில்லியில் பா.ஜ., பதவி ஏற்றதில் இருந்து முந்தைய ஆட்சியின் பல திட்டங்களை ஆய்வு செய்து சீரமைத்து வருகிறது. கல்வி, சுகாதாரம், பொதுப்பணி, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் தீவிர ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில், டில்லி அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள உத்தரவு:
கடந்த 2ம் தேதி முதல்வர் ரேகா குப்தா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் வழங்க முந்தைய ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை, ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாயாக குறைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், அமைச்சரவை முடிவு எண் 3187ன் படி, 2025 - 20-26 நிதியாண்டிலிருந்தே சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாயாக குறைக்கப்படுகிறது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட பணிகளுக்கும், அரசு சொத்துக்களை பழுது பார்ப்பதற்கும் இந்த நிதியை செலவிடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில், 2021- - 2022 மற்றும் 2022 - 20-23 ஆகிய நிதியாண்டுகளில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி நான்கு கோடி ரூபாயாக இருந்தது. அதுவே, 2023 - 20-24ம் ஆண்டில் ஏழு கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.