'ராமர் கோவில் திறப்பு விழா நாளில் வீடுகள் முன்பாக விளக்கேற்றுங்கள்'
'ராமர் கோவில் திறப்பு விழா நாளில் வீடுகள் முன்பாக விளக்கேற்றுங்கள்'
'ராமர் கோவில் திறப்பு விழா நாளில் வீடுகள் முன்பாக விளக்கேற்றுங்கள்'
ADDED : ஜன 08, 2024 06:54 AM

சிக்கமகளூரு; ''அனைத்து ராம பக்தர்களையும், ஜனவரி 22ல் அயோத்திக்கு அழைக்க முடியாது. அங்கிருந்தே மந்திர அட்சதை வந்துள்ளது. இதை வைத்து வீட்டில் பூஜியுங்கள். ராமர் கோவில் திறப்பு விழா அன்று, வீடுகளின் முன்பாக விளக்கேற்ற வேண்டும், என மத்திய விவசாயம், விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா தெரிவித்தார்.
சிக்கமகளூரில் நேற்று அவர் கூறியதாவது:
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவிலில் வரும் 22ல் ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. எனவே கர்நாடக பா.ஜ., சார்பில் வீடு வீடாக மந்திர அட்சதை வினியோகிக்கப்படுகிறது.
அனைத்து ராம பக்தர்களையும், வரும் 22ல் அயோத்திக்கு அழைக்க முடியாது. அங்கிருந்தே மந்திர அட்சதை வந்துள்ளது. இதை வைத்து வீட்டில் பூஜியுங்கள். ராமர் கோவில் திறப்பு விழா நடக்கும் நாளில், அனைத்து வீடுகளின் முன்பாக விளக்கேற்ற வேண்டும்.
மத கலவரத்தை ஏற்படுத்துவதே, காங்கிரசாரின் மனநிலையாகும். இப்போது நாடு அமைதியாக உள்ளது. மோடி ஆட்சியில் பயங்கரவாதம், மத கலவரம் நடக்கவில்லை.
காங்கிரஸ் அரசில் நாட்டில் பயங்கரவாதங்கள் நடந்தன. மோடி அரசு வந்த பின், பயங்கரவாத மனநிலை கொண்டவர்களுக்கு, பயம் வந்துள்ளது.
ராமர் கோவில் திறப்பு விழாவின் போது, மத கலவரம் நடத்த காங்கிரஸ் திட்டம் வகுத்திருக்க கூடும். இது குறித்து தகவல் கிடைத்ததால், கோத்ரா போன்ற வன்முறை நடக்கும் என, ஹரிபிரசாத் கூறியிருப்பார்.
நாட்டு மக்களுக்கு வன்முறை தேவையில்லை. அமைதியை விரும்புகின்றனர். கோவில் கட்டிய பின், ராமருக்கு தனி சிறப்பு தந்துள்ளது. நம் நாட்டில் நம் ராமருக்கு கோவில் கட்டியதாக தோன்றுகிறது. யார் கூறுவதையும் பொருட்படுத்தாதீர்கள். அனைவரும் அமைதியை காப்பாற்றுங்கள்.
மக்களின் நுாற்றாண்டு கனவு நிறைவேறியுள்ளது. ராமர் கோவிலுக்காக லட்சக்கணக்கான மக்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். 500 ஆண்டுகளாக ராமர் கோவிலுக்காக போராட்டம் நடந்தது. வரும் 22ல் ராமர் கோவில் திறப்பு விழா நடக்கிறது.
அன்றைய தினம் ராமர் கோவிலில் இருந்து வந்த மந்திர அட்சதையை வைத்து பூஜியுங்கள். வீடுகளில் இனிப்பு தயாரித்து உணவருந்த வேண்டும். ராமர் கோவிலுக்காக செங்கல் சுமந்தவர்கள், அடி வாங்கியவர்களுக்கு அன்று மகிழ்ச்சியான நாளாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.