Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மகர ஜோதி நாளில் பக்தர்கள் எண்ணிக்கையை குறைக்க வலியுறுத்தி போலீஸ் தரப்பில் கடிதம்

மகர ஜோதி நாளில் பக்தர்கள் எண்ணிக்கையை குறைக்க வலியுறுத்தி போலீஸ் தரப்பில் கடிதம்

மகர ஜோதி நாளில் பக்தர்கள் எண்ணிக்கையை குறைக்க வலியுறுத்தி போலீஸ் தரப்பில் கடிதம்

மகர ஜோதி நாளில் பக்தர்கள் எண்ணிக்கையை குறைக்க வலியுறுத்தி போலீஸ் தரப்பில் கடிதம்

ADDED : ஜன 03, 2024 12:54 AM


Google News
சபரிமலை:மகர ஜோதி நாளில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் இருந்து, தேவசம் போர்டு ஆணையர் மற்றும் நிர்வாக அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் ஜன., 15-ல் நடக்கிறது. ஜோதி நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் ஜன., 14 மற்றும் 15க்கான முன்பதிவு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தான் துவங்கியது.

திருவிதாங்கூர் தேவசம்போர்டு இந்த சீசனில் அனுமதித்ததை விட குறைவான பக்தர்களுக்கு முன்பதிவு வழங்கியிருந்தது.

ஆனால் மகரஜோதி, அதற்கு முந்தைய நாளிலும் பக்தர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க வேண்டும் என்று கேட்டு பத்தனம்திட்டா போலீஸ் அலுவலகத்தில் இருந்து, திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆணையர் மற்றும் நிர்வாக அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் வரும் 14-ல் 40,000 பேருக்கும், ஜன., 15ல் 20,000 பேருக்கும் தரிசனத்திற்கு முன்பதிவு வழங்கினால் போதுமானது என்று கூறப்பட்டு உள்ளது.

பம்பை ஆஞ்சநேயா ஆடிட்டோரியத்தில் உள்ள, 'ஸ்பாட் புக்கிங்' கவுன்டரை மூட வேண்டும் என்றும், ஸ்பாட் புக்கிங்கை நிலக்கல்லில் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளதால், பாதுகாப்பு கருதி இந்த கடிதம் அனுப்பப்படுவதாகவும் அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதில் தேவசம் போர்டு தரப்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அரவணைக்கு தட்டுப்பாடு


நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் நிலக்கல் வரும் பாதைகளில் வாகனங்களை தடுத்து நிறுத்த, சன்னிதானம் போலீசில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் முக்கட - இடமண், பெருநாடு - சபரிமலை பாதையில் கண்ணம்பள்ளியில் பக்தர்களின் வாகனங்கள் தடுக்கப்பட்டன. இந்த இடங்களில் கடைகளோ அல்லது உணவு தயாரிப்பதற்கான வசதிகளோ இல்லாததால் பக்தர்கள் தங்களை தொடர்ந்து செல்ல அனுமதிக்க பக்தர்கள் கோரியும் போலீசார் மறுத்தனர்.
இதற்கிடையில் ரான்னி பகுதியிலிருந்து வந்த வாகனங்கள் அத்திக்கயம் வழியாக அனுப்பப்படுவதை பார்த்த பக்தர்கள் ரான்னி - அத்திக்கயம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அந்த பக்தர்களை நிலக்கல்லுக்கு அனுப்பினர். அதுபோல எருமேலியிலும் மறியல் நடந்தது.
சபரிமலையில் அரவணை டின்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு டின், 6.47 ரூபாய் என்ற வீதத்தில், தினமும், 1.30 லட்சம் டின்கள் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் சம்பந்தப் பட்ட நிறுவனம், 65,000 மட்டுமே வழங்கியது.இதனால் டின்கள் தட்டுப்பாடு காரணமாக தினசரி உற்பத்தி, மூன்று லட்சத்திலிருந்து இரண்டு லட்சத்து 30 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு பக்தருக்கு, 10 டின் அரவணை என்பது ஐந்து டின்னாக குறைக்கப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us